NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உவர்மலை 22ம் படைப்பிரிவின் இராணுவப்படைத்தளத்தினை அண்மித்த வீதியின் ஒரு பகுதி திறப்பு..!

திருகோணமலையில் மூன்று தசாப்த காலங்களாக . இராணுவ கட்டுப்பாட்டின் கீழாக மூடப்பட்டிருந்த உவர்மலை 22ம் படைப்பிரிவின் இராணுவப்படைத்தளத்தினை அண்மித்த வீதியின் ஒரு பகுதி திறக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் அலுவலக வீதி வழியா 22ம் படைப்பிரிவின் இராணுவ நூதனசாலையின் வாயிலில் இருந்து உவர்மலை மத்திய வீதியினை அடையக்கூடியதான வீதியானது கடந்த மூன்று தசாப்த காலமாக பொதுமக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படாத நிலையில் வீதித்தடைகள் போடப்பட்டிருந்த நிலையில் குறித்த வீதியானது பொதுமக்கள் பாவனைக்காக இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.

உவர்மலை பகுதின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள குறித்த 22ம் படைப்பிரிவினை அடைவதற்கான வீதிகளாக மூன்று வீதிகள் காணப்படுகிறது. இருப்பினும் அவ் வீதிகளூடான மக்கள் போக்குவரத்தானது சில பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அவ்வீதியூடான போக்குவரத்தானது இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.

Share:

Related Articles