NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஊக்கமருந்து பயன்படுத்திய வீரருக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை..!

ஒலிம்பிக் போட்டியில் வீரா், வீராங்கனைகளிடையே ஊக்கமருந்து பயன்பாடு தொடா்பான பரிசோதனையைச் சா்வதேச சோதனை அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சோதனையில், ஈராக்கைச் சோ்ந்த ஜூடோ வீரா் சஜத் செஹென் (28) இரு வகையான ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டதையடுத்து அவருக்கு ஒலிம்பிக் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு நடப்பது ஒலிம்பிக் வரலாற்றில் இதுவே முதல் தடவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles