கண்டி, எசல பெரஹெராவை முன்னிட்டு விசேட பஸ் சேவைகளை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்த விசேட பஸ் சேவைகளானது எதிர்வரும் 14 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்திற்கு 438 பஸ்கள் பொதுமக்கள் சேவைகளுக்காக வழங்கப்படவுள்ளன.
மேலும், அநுராதபுரம், பொலன்னறுவை, குருணாகல் , கேகாலை , கொழும்பு, கம்பஹா, நாவலப்பிட்டிய மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளுக்கு 100 பஸ்கள் பொதுமக்கள் சேவைகளுக்காக வழங்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளது.