NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எதிர்காலத்தில் பாடசாலை வகுப்பறையில் பிள்ளைகள் தங்குவது கட்டாயமாக்கப்படும் – கல்வி அமைச்சர்

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

எதிர்காலத்தில் பாடசாலை வகுப்பறையில் பிள்ளைகள் தங்குவது கட்டாயமாக்கப்படும் எனவும் அது அனைத்து தரங்களுக்கும் பொருந்தும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைய தினமும் பாடசாலை வருகை அவசியம் என கல்வி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய கல்வி மாற்றத்தில் ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையில் கூட நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் வகுப்பறையில் தங்கியிருந்து பெற வேண்டிய புள்ளிகள் குறிப்பிட்ட அளவு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles