NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக போசாக்கு திட்டத்தை முன்னெடுக்க திட்டம் – நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு..!

எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக போசாக்கு திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதுடன், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள போசாக்கு திட்டத்தில் மேலும் பல புதிய அம்சங்களை சேர்க்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சர்வதேச உடல் பருமன் தினமான மார்ச் 4 ஆம் திகதியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைபவணியில் கலந்துக் கொண்டதன் பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் திகதி உலக மக்களால் சர்வதேச உடற்பருமன் தினம் அனுஷ்டிக்கப்படுவதாகவும், அந்த வகையில் இந்த ஆண்டு “உடல் பருமனை ஒழிப்போம், தொற்றா நோய்களைத் தடுப்போம்” என்னும் விசேட தொனிப்பொருளுக்கமைய அனுஷ்டிக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான போசாக்கு திட்டத்தை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள போசாக்கு திட்டத்தில் மேலும் பல புதிய அம்சங்களை உள்ளடக்கிய வகையில் இத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles