உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் திகதி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாட்டில் 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 272 பிரதேச சபைகள் என மொத்தமாக 336 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான அறிவிப்பு ஏற்கனவே உள்ளுராட்சி மன்றங்களுக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வேட்பு மனுக்கள் மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை அந்தந்த மாவட்ட தெரிவுத்தாட்சி அல்லது மாவட்ட செயலாளர் அலுவலம் அல்லது அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.