NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணத்தை பகிர்ந்தளிக்கும் கட்சி நாம் அல்ல – ரவி குமுதேஷ்

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பிரபல்யத்தை விரும்பாத சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக, ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும், ஊடகப் பேச்சாளருமான, ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற கட்சியின் முதலாவது மாநாட்டின் போது, பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுவது பொய்யானது எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய ஜனநாயக கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களை தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று இடம்பெற்றிருந்தது. இதன்போது கருத்து தெரிவித்த ரவி குமுதேஷ், கட்சியின் வளர்ச்சியை விரும்பாத சிலர் பொய்களை பரப்பிர வருவதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

திட்டமிட்டதைப் போன்று மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், பொய்யான செய்திகளினால் தகவல்கள் உருவாக்கப்பட்டுள்ள என்றும். அந்த பொய்க்கும் தமது கட்சிக்கும் ஏதாவது தொடர்பு இருந்தால் அதை நீரூபித்து காட்ட வேண்டும் என்றும் சவால் விடுத்தார்.

எனினும், பொய்யான தகவல் தொடர்பில் கட்சி சார்பாக ஆராய்ந்து பார்த்ததில் தமது கட்சிக்கு, அந்த தகவல் தொடர்பில் எந்தவொரு சம்பந்தமும் இல்லை எனவும் அவர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles