NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்!

எரிபொருள் விலை இன்று (04) நள்ளிரவு முதல் திருத்தப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாத இறுதியில் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த நிலையில், இன்று திருத்தம் இடம்பெறும் என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த விலை திருத்தத்தில் எரிபொருள் விலையில் பெரிய மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாதாந்தம் திருத்தியமைக்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கடந்த ஜனவரி 31ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு, ஒக்டேன் 92 பெட்ரோல், ஒக்டேன் 95 பெட்ரோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

இதேவேளை, மின்சார விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் போன்ற அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நேற்று (03) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

Share:

Related Articles