NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஈட்டப்பட்டுள்ள இலாபத்தை தொடர்ந்து, எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கருத்து தெரிவிக்கையில், கடந்த 5 மாதங்களில் மாத்திரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 60 மில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளது. இந்த இலாபத்தை எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செயற்படும். அத்துடன் எதிர்காலத்தில் எரிபொருளின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த இலாபத்தை பெறுவதற்கு முக்கிய காரணம், கூட்டுத்தாபனத்தில் நிலவிய வினைத்திறனின்மை மற்றும் முறைகேடுகளை கண்டறிந்து அகற்றியமையே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles