NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எரிவாயு விலை குறைவடைந்தாலும் உணவுப்பொருட்களின் விலையை குறைக்க முடியாது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சமையல்; எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்காதமையால், குறைந்த விலையில் உணவு மற்றும் பானங்களை நுகர்வோருக்கு வழங்க முடியாது என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உணவகங்களை நடத்துவதில் ஊழியர்களின் சம்பளம் உட்பட மரக்கறி விலை, கோழி இறைச்சி விலை, கோதுமை மாவின் விலை என்பன அதிக விலைக்கு பெறப்படுவதாகவும், அதற்கேற்ப குறைக்கப்பட்ட எரிவாயு விலையுடன் தாங்கள் அதிக விலைக்கு உணவுப் பொருட்களை பெறுவதாகவும் உணவக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை அரசாங்கம் பல தடவைகள் குறைத்த போதிலும் வர்த்தகர்கள் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வழங்குவதில்லை என நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

Share:

Related Articles