NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எலான் மஸ்கிற்கு 10 குழந்தைகள்?

தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் அவரது முன்னாள் காதலி கிரிம்ஸிக்கும் மூன்றாவது குழந்தை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

எலான் மஸ்க் வாழ்க்கை வரலாற்று நூலை ஆசிரியர் வால்டர் ஐசக்சன் எழுதியுள்ளார். இதற்காக 2 ஆண்டுகளாக எலான் மஸ்க் மற்றும் அவரின் நெருங்கியவர்களிடம் அவர் தகவல்களை திரட்டியுள்ளார்.

சமீபத்தில் எலான் மஸ்க் – ஷிவோன் ஸிலிஸ் தம்பதிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை வால்டர் ஐசக்சன் இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், அவர் எழுதியுள்ள நூலில் எலான் மஸ்க் – கிரிம்ஸுக்கு பிறந்த மூன்றாவது குழந்தை பற்றிய தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.

எலான் மஸ்க், கனடாவை சேர்ந்த கிரிம்ஸ் என்பவருடன் கடந்த 2018 முதல் 2022 வரை காதலில் இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததாகதான் இவ்வளவு காலம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. 

அந்த குழந்தையின் பெயர் டெக்னோ மெக்கானிக்கஸ் என்றும், செல்லமாக டாவ் எனப் பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இரகசியமாக வளர்க்கப்படும் இந்த குழந்தையின் வயது அல்லது பிறந்த திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிற்கு மூன்றுமுறை விவாகரத்தாகியுள்ளது. அவருக்கு மொத்தம் 10 குழந்தைகள் உள்ளனர்.

Share:

Related Articles