NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எலான் மஸ்க் vs மார்க் ஸூகர்பெர்க் !

மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஸூகர்பெர்க் உடன் கூண்டுக்குள் நேருக்கு நேர் மோத தான் தயார் என ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவீட் செய்துள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த மோதலுக்கு தானும் தயார் என மார்க் ஸூகர்பெர்க் சம்மதம் தெரிவித்துள்ளார். அதோடு மோதலுக்கான நிகழ்விடத்தை அனுப்பவும் என பதிலளித்துள்ளார்.

இதனை இன்ஸ்டாவில் ஸூகர்பெர்க் தெரிவித்திருந்தார். மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரும் இதனை உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில் ‘Vegas Octagon’ என மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள இந்த இடத்தில் பலவிதமான தற்காப்பு கலை வீரர்கள் போட்டியிடுவது வழக்கம். அந்த வகையில் இங்கு மோதலை வைத்துக் கொள்ளலாம் என்ற தொனியில் மஸ்க் தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles