NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எலிக்காய்ச்சல் – கிளிநொச்சியில் இருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) எனச் சந்தேகிக்கப்படும் நோய் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் T.வினோதன் தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

கிளிநொச்சி – முழங்காவில் மற்றும் கண்டாவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனவே காய்ச்சல், தசைநோவு, கண்சிவத்தல், சுவாசப்பிரச்சினைகள் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் வலியுறுத்தியுள்ளார்.

Share:

Related Articles