இந்த வருடம் இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி மாகாண சபை வளாகத்தில் நடைபெற்ற எலிக்காய்ச்சலைத் தடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 1,882 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, கிரியெல்ல, எலபாத்த, பெல்மடுல்ல, ஓபநாயக்க, நிவித்திகல, கலவான மற்றும் கல்தொட்ட ஆகிய பிரதேசங்கள் எலிக்காய்ச்சல் அபாயம் உள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எலிக் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் சிறுநீரகம், இதயம், மூளை போன்ற உறுப்புகள் செயலிழந்து மரணம் கூட ஏற்படலாம் என சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்