அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகனில் நடந்துள்ள நிதி முறைகேட்டை கண்டறிவதற்கான, விசேட அரச பிரதிநிதியாக எலோன் மஸ்க்கை நியமிக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
பென்டகனில் நிதி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், ட்ரம்ப் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பென்டகனுக்கு ஒவ்வொரு வருடமும் வரவு – செலவு திட்டத்தில் ஒரு ட்ரில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் 895 பில்லியன் டொலர்களை ஒதுக்கியிருந்தார். இந்நிலையில், குறித்த நிதி ஒதுக்கீட்டில் முறைக்கேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்வித்துறையையும், இராணுவத்துறையையும் ஆய்வு செய்யும் பொறுப்பை எலோன் மஸ்கிடம் வழங்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், பல்வேறு தரப்பினரும் ட்ரம்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.