எல்பிட்டிய பிரதேச சபையின் 2025ஆம் ஆண்டுக்கான முதலாவது வரவு-செலவுத் திட்டம் எவ்வித விவாதமும் இன்றி ஏகமனதாக இன்று நிறைவேற்றப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் சனத் சுமனசிறியினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரவு- செலவுத் திட்டம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் நளீன் பிரியதர்ஷனவின் முன்மொழிவுடன் பொதுஜன ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் சரத் அல்விஸின் வழிமொழிவுடன் நிறைவேற்றப்பட்டமை விசேட அம்சமாகும்.
தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் உட்பட 15 உறுப்பினர்கள், பிற கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 உறுப்பினர்கள் அடங்களாக, 26 உறுப்பினர்கள் இந்த விசேட கூட்டத்தில் பங்கேற்றனர்.