NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“ஏப்ரல் 21 உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள் ” – கர்தினால் ரஞ்சித் ஆண்டகை !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் முதல் 21 ஆம் திகதி காலை வரை கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து சமய ஊர்வலம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதே நேரம் ,கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியர் தேவாலயத்தில் இரவு முழுவதும் பிரார்த்தனை செய்துவிட்டு, காலை 8.30 மணியளவில் துவாபிட்டிய தேவாலயத்தை இவ் ஊர்வலம் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Share:

Related Articles