NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் பலி!

இந்தியா – உத்தரப்பிரதேச மாநிலம், கபீர்நகர் மாவட்டம், பார்கோ கிராமத்துக்கருகில் பாகிரா என்ற ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த நான்கு சிறுமிகளும் ஆற்றில் பயணித்திருந்த நிலையில், எதிர்பாரதவிதமாக படகு கவிழ்ந்ததில் நான்கு சிறுமிகளும் ஆற்றில் மூழ்கியுள்ளனர்.

நால்வரில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டதுடன் ஒரு சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் இந்த மாவட்டத்தில் துத்ரா பொலிஸ் நிலைய எல்லைப் பகுதியில், இரண்டு சகோதரிகள் ஊரை அண்டிய இடத்தில் இருந்த தோட்டத்துக்கு செல்லும் வழியில் அருகிலுள்ள குட்டையில் ஒருவர் தவறி விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்கு குட்டையில் குதித்த மற்ற சகோதரியும் உயிரிழந்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles