NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஏறாவூரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் படுகொலை..!

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் மிச்நகர் – ஹிஸ்புல்லா நகர் பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்படு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

52 வயதுடைய ஹிஸ்புல்லா நகர் பகுதியைச் சேர்ந்த ஜமால்டீன் ஷேகுதாவவூத் என்பவரே அவரது வீட்டில் இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் திருமணமாகாதவர் என்பதுடன் இன்று (07) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலை நடந்த வீட்டில் இருந்த சிசிரிவி கமராவின் பிரதான சேமிப்பு தட்டு சந்தேக நபரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகைதந்த தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் சடலத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சடலம் பிரதே பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles