NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஏறாவூரில் 14 வயது சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய 22 வயது இளைஞன் கைது!

மட்டக்களப்பு – ஏறாவூரில் 14 வயது சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரது தாயாரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரையும் நேற்றையதினம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு சென்றிருப்பதால் சிறுமி, உறவினரின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சிறுமி, அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் நிலையில், அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த மே மாதம் குறித்த சிறுமியை இளைஞன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தவறான முறைக்குட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சம்பவதினமான நேற்றையதினம் சிறுமியை அடைத்து வைத்து தவறான முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டிலும் அவரது தாயை அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டிலும் பொலிஸார் கைது செய்ததுடன் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles