ஐக்கிய இராச்சியத்தில் பிரதமர் மற்றும் அமைச்சரவையின் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தாண்டு கௌரவப் பட்டியலில், 3 சிறந்த இலங்கையர்கள் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, ஆக்லாந்தில் உள்ள செயின்ட் ஜோன்ஸை தளமாகக் கொண்ட வைத்தியர் ஆன் டோலோரஸ் பெரேரா, உணவு அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் சமூகம் ஆகியவற்றிற்கான தனது விதிவிலக்கான சேவைகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
அதுல குடா பண்டார வனசிங்க, இலங்கை சமூகம் மற்றும் கிரிக்கெட்டுக்கான அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக குயின்ஸ் சர்வீஸ் மெடலைப் பெறுகிறார். அவரது அங்கீகாரம் சமூக சேவை மற்றும் கிரிக்கெட் களம் ஆகிய இரண்டிலும் அவரது குறிப்பிடத்தக்க தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
இலங்கை சமூகத்திற்கான சேவைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட வெலிங்டனைச் சேர்ந்த சதுன் கித்துலகொட, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக புலம்பெயர்ந்த சமூகத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார். ஐக்கிய இலங்கை சங்கம் மற்றும் இலங்கை நடன அகாடமி உட்பட பல்வேறு நிறுவனங்களில் முக்கிய நபராக, கித்துலகொட கலாசார தொடர்புகளை வளர்ப்பதிலும் சமூக நிகழ்வுகளை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.