(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, முன்னாள் நிதியமைச்சராக உள்ள ரவி கருணாநாயக்கவை அந்தப் பதவிக்கு நியமிப்பது குறித்து கட்சியில் ஏற்கனவே சில கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செயலாளர் நாயகமாக ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் மற்றுமொரு குழுவினர் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவுக்கு வேறு பதவி கிடைக்கவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவின் போது, வேறு சில பதவிகளிலும் சில மாற்றங்கள் இடம்பெறவுள்ளமை தொடர்பில் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.