NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐ.சி.சி.யின் சிறந்த வீராங்கனையாக இலங்கை நட்சத்திரம் தேர்வு!

2023 செப்டெம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீராங்கனையாக இலங்கை நட்சத்திரம் சாமரி அத்தபத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியின் லாரா வோல்வார்ட் மற்றும் நாடின் டி கிளர்க் ஆகியோருடனான பலத்த போட்டிக்கு மத்தியில் சாமரி அத்தபத்து குறித்த விருதினை வென்றுள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான வரலாற்று தொடர் வெற்றிக்கு இலங்கை அணியை அழைத்துச் சென்றதன் மூலம் அவர் இந்த விருதினை பெற்றுள்ளார்.

இங்கிலாந்து மகளிர் அணியுடான T20 தொடரினை இலங்கை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இலங்கை அணித் தலைவி சாமரி அத்தபத்து மொத்தமாக 114 ஓட்டங்களை குவித்து, 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

அத்துடன் குறித்த தொடரின் சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டார். இது தவிர, செப்டெம்பரில் நடந்த ஆசியக் கிண்ண தொடரிலும் இவர் சிறந்த திறனை வெளிக்காட்டினார்.

மொத்தமாக கடந்த செப்டெம்பரில் 33 வயதான வீராங்கனை 5 T20 போட்டிகளில் விளையாடி 26 சராசரியில் 208 ஒட்டங்களை குவித்தார்.

இடது கை துடுப்பாட்ட வீராங்கனையான அத்தபத்து தற்சமயம் ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ளார். மகளிர் T20 துடுப்பாட்ட தரவரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles