NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் பதவி விலகல்!

ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 24 நாட்களாக கடுமையான மோதல் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஹமாஸை அடியோடு அழிப்போம் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.

அதற்காக, காசா மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தரை வழித் தாக்குதலையும் தொடங்கியுள்ளது.

இந்தப் போரில் இதுவரை 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், ஐ.நா. மனித உரிமைகள் இயக்குநர் கிரேக், தனது கதவி விலகல் கடிதத்தை உயர் ஆணையரிடம் வழங்கியுள்ளார்.

அவரின் கடிதத்தில், காசாவை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் ஐ.நா. அவை மற்றும் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Share:

Related Articles