ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் IPL ஏலத்தில் ரூ.1.10 கோடிக்கு போட்டி போட்டு வாங்கப்பட்ட சூர்யவன்ஷிக்கு 14 வயதே ஆகிஇருத நிலையில், இச் சிறுவனை ஏலத்தில் வாங்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்னதான் செய்யப்போகிறது என பலவாறான கேள்விகள் எழ ஆரம்பித்தன.
ஆனால் சூர்யவன்ஷி தனக்கிருந்த அபாரமான பேட்டிங் திறமையை ஜெய்ப்பூரில் நேற்றையதினம் நடைப்பெற்ற IPL டி20 லீக் ஆட்டத்தில் வெளிப்படுத்தியிருந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் என்ற வெற்றி இலக்கை 15.5 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இந்த வெற்றியில் முக்கிய பங்கு சூர்யவன்ஷியையே சாரும் என தற்போது சூர்யவன்ஷியை புகழ்ந்து வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் 38 பந்துகளில் 101 ரன்கள் (11 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) எடுத்து சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார் மேலும் 265 ஸ்ட்ரைக் ரேட்டில் சூர்யவன்ஷி பெட்டிங் செய்ததாகும் .
14 வயது சிறுவன் 35 பந்துகளில் அடித்த சதம் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.