NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒன்லைனில் கடன் பெற்றவர்களுக்கு விசேட அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இணைய நிறுவனங்களில் கடன் பெற்று, கடனை செலுத்தாத பலரை நீதிமன்றத்திற்கு வரவழைக்க நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, கேகாலை, பொலன்னறுவை, மன்னார், புத்தளம், அவிசாவளை, பெலியஅத்த, மாவனெல்ல, ஹகுராங்கெத்த, போன்ற பிரதேசங்களில் இணைய வழி முறைகள் மூலம் வேண்டுமென்றே இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் குறைவான கடனைப் பலர் பெற்றுள்ளனர்.

கடனை பெற்றுவிட்டு பணத்தை செலுத்த தவறியதால், அவர்களை செப்டம்பர் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மாவட்ட நீதிபதி அருண விக்கிரமசிங்க நேற்று மனு அனுப்பியுள்ளார்.

கையடக்க தொலைபேசி செயலி மற்றும் இணையதளங்கள் மூலம் எந்தவித பாதுகாப்பு ஆவணங்களும் வழங்காமல் கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக கொழும்பு 7 இல் அமைந்துள்ள On Credit Online நிறுவனம் தாக்கல் செய்திருந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த நிறுவனம் 2021 ஆம் ஆண்டு முதல் சிறிய அளவிலான கடன்களை வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

கடன் கோரியவர்களுக்கு தனது நிறுவனத்தின் கையடக்க தொலைபேசி மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட தரவுகள் ஒப்பிட்டு அதற்கேற்ப கடன்கள் வழங்கப்படுவதாகவும் மனுதாரரின் சட்டத்தரணி வீரசேகர தெரிவித்தார்.

கடனை வழங்கும்போது கடனாளர்களிடம் எந்தப் பத்திரமும் எடுக்கப்படுவதில்லை. அவர்கள் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கு எண்ணில் குறுகிய காலத்திற்குள் கடன் தொகை வரவு வைக்கப்படுவதாகவும் முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடனை வழங்கும்போது கடனாளர்களிடம் எந்தப் பத்திரமும் எடுக்கப்படுவதில்லை. அவர்கள் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கு எண்ணில் குறுகிய காலத்திற்குள் கடன் தொகை வரவு வைக்கப்படுவதாகவும் முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles