NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒருநாள் உலகக் கிண்ண சின்னங்களை அறிமுகம் செய்த ICC !

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான சின்னங்களை (Mascot) சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது.

அதன்படி பெயரிடப்படாது அறிமுகம் செய்து வைத்திருக்கப்பட்டிருக்கும் உலகக் கிண்ண சின்னங்களில் ஆண் பாத்திரம் ஒன்றும் பெண் பாத்திரம் ஒன்றும் காணப்படுகின்றன.

அதேவேளை, இந்த பாத்திரங்கள் ஆண், பெண் என இருபாலாரும் கிரிக்கெட் விளையாட்டின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயற்படுவதற்கு கொண்டிருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்துவதனை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த சின்னங்கள் தொடர்பில் ICC வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ஆண், பெண் பாத்திர சின்னங்கள் பாலின சமத்துவத்தினையும், பல்லினத் தன்மையினையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கின்றது.

ஒருநாள் உலகக் கிண்ணத்திற்காக வெளியிடப்பட்டுள்ள சின்னங்கள் இந்தியாவிற்காக 19 வயதின் கீழ் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர்களை வென்று கொடுத்த அதன் தலைவர்களான ஷெபாலி வெர்மா மற்றும் யாஷ் டல் ஆகிய வீர, வீராங்கனைகள் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ICC கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து தமது உலகக் கிண்ணத் தொடர்களுக்காக சின்னங்களை அறிமுகம் செய்து வைத்து வருகின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.

Share:

Related Articles