NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் டேவிட் வோர்னர்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை துடுப்பாட்டக்காரரான டேவிட் வோர்னர், பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அதற்கமைய, சிட்னியில் 3ஆம் திகதி தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியே அவரது கடைசி போட்டியாகும்.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் அவுஸ்திரேலியா சம்பியன் பட்டம் வென்றது. அப்போட்டியில், தொடக்க வீரரான வோர்னர் சிறப்பான பங்களிப்பை அணிக்கு வழங்கினார்.

இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்துள்ளார். 161 ஒருநாள் போட்டிகளில் 6932 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 45.30 ஆகும். ஸ்டிரைக் ரேட் 97.26. ஒரு நாள் போட்டியில் 179 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 22 சதங்கள், 33 அரைசதங்கள் அடித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வோர்னர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles