கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 100,000க்கும் மேற்பட்ட, சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் அந்தரங்க காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த காணொளிகள் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் அவர்களின் அந்தரங்கத்தை வெளிப்படுத்துவதாகவும் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்தக் காணொளிகளைப் பதிவேற்றியவர்களைக் கண்டறிந்து கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.