இங்கிலாந்து அரசின் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை மேற்பார்வையில் இலண்டன் யுனிவர்சிட்டி (UCL) ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது.
அதில், புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக 20 நிமிடங்களை இழப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு பாக்கெட்டில் உள்ள 20 சிகரெட்டுகளை புகைப்பதால் வாழ்நாளில் சுமார் 7 மணிநேரத்தை மனிதன் பறிகொடுப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஆண்கள் ஒவ்வொரு சிகரெட்டிலும் தங்கள் வாழ்நாளில் 17 நிமிடங்களை இழப்பதாகவும், பெண்கள் 22 நிமிடங்களை இழப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, நீண்ட கால புகைப்பழக்கம் உடையவர்கள், தங்கள் வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.