NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒரே குடும்பத்தை சேரந்தவர்கள் பயணித்த கார் விபத்து!

ஹொரணையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயணித்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் குயில்வத்தை பகுதியில் இன்று (19) அதிகாலை 5.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரின் சாரதி தூங்கியதால், கார் வீதியை விட்டு விலகி தேயிலைத் தோட்டம் ஒன்றிற்குள் புகுந்துள்ளது.

இவ்விபத்தில் காரில் பயணித்த எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், கார் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Related Articles