NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதுடன் நடப்பு கூட்டத்தொடரிலே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகயுள்ளது.

இந்தநிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது,

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இது நடைமுறைக்கு மாறான ஜனநாயக விரோத நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மாநிலங்களின் குரல்களை அழித்து கூட்டாட்சித்தன்மையை சிதைத்து ஆட்சியை சீர்குலைக்கும் எனவும் இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம் எனவும முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles