NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட விராட் கோலியே காரணம் !

கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் கமிட்டி இதற்கு இத்தனை விரைவாக ஒப்புக் கொள்ள இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் ஒரு முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விராட் கோலிக்கு மட்டுமே 34 கோடி ரசிகர்கள் இருப்பதை கண்டு வியந்து போன ஒலிம்பிக் கமிட்டி கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க ஒப்புக் கொண்டு இருக்கிறது. இதை தற்போதைய ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரி ஒருவரே கூறியும் இருக்கிறார்.

சுமார் 128 ஆண்டுகளுக்கு முன் ஒலிம்பிக் தொடரில், கிரிக்கெட்டும் இடம் பெற்றது. பின்னர் கிரிக்கெட் அனைத்து நாடுகளாலும் விளையாடப்படும் ஒரு விளையாட்டு அல்ல என்றும், அப்போது இருந்த டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்தி முடிப்பதும் சவாலான விஷயமாக இருப்பதாகக் கூறி அதனை நீக்கியது ஒலிம்பிக் கமிட்டி.

அதன் பின் இப்போது தான் கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் தொடரின் போது கிரிக்கெட் விளையாட்டும் அதில் நடைபெறும்.

ஆனால், இந்த முறை டி20 கிரிக்கெட் மட்டுமே ஒலிம்பிக்கில் நடைபெறும். இதற்காக நடந்த பேச்சுவார்த்தைகளில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல முன்னெடுப்புகளை செய்துள்ளது.

அதில் கிரிக்கெட் விளையாட்டு எத்தனை பிரபலம் என்பதை காட்ட விராட் கோலி சமூக ஊடகத்தில் எவ்வளவு பெரிய சக்தி என கூறி இருக்கிறது ஐசிசி. கிரிக்கெட் விளையாட்டுக்கு எத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை சொல்வதை விட ஒரே ஒரு கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு எத்தனை ரசிகர்கள் என பாருங்கள் என கூறி இருக்கிறது ஐசிசி.

கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டுமே 24 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். மும்பையில் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்ப்பது குறித்த அறிவிப்பு நிகழ்ச்சி நடந்தது.

அதில்​​இத்தாலிய ஒலிம்பிக் சாம்பியனும், 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் தொடரின் இயக்குநருமான நிகோலோ காம்ப்ரியானி, 128 வருட இடைவெளிக்குப் பிறகு கிரிக்கெட்டை இணைப்பதற்கான காரணத்தை விளக்கும் போது, “உலகில் அதிகம் பின்தொடரும் விளையாட்டு வீரர்களில் எனது நண்பர் விராட் கோலி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

இது (அமெரிக்க விளையாட்டு பிரபலங்களான) லெப்ரான் ஜேம்ஸ், டாம் பிராடி மற்றும் டைகர் உட்ஸ் ஆகியோரை பின்தொடர்பவர்களை சேர்த்தாலும் கூட அதிகம்.” என குறிப்பிட்டு இருக்கிறார்.

Share:

Related Articles