சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து ஆறாவது நாளாக இடம்பெற்று வரும் நிலையில், பதக்கப் பட்டியலில் பெரிய மாற்றம் எதுவும் இடம்பெறவில்லை.
தொடர்ந்து 9 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக 19 பதக்கங்களை பெற்ற சீனா முதலிடத்திலும், 8தங்கம், 10வெள்ளி, 8 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 26 பதக்கங்களை பெற்று ப்ரான்ஸ் இரண்டாம் இடத்திலும், 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 15 பதக்கங்களை பெற்று ஜப்பான் மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றது.
மேலும், முறையே அவுஸ்த்ரேலியா 4ஆம் இடத்திலும் பிரித்தானியா 5ஆம் இடத்திலும் கொரியா 6ஆம் இடத்திலும் காணப்படுகின்றன.
இது இவ்வாறிருக்க போட்டியாளர்கள் பலர் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருவதோடு பலர் உலக சாதனைகளையும் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.