NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓடிடியிலும் சாதனை படைத்த IPL !

16 ஆவது ஐபிஎல் தொடரின் தொடரின் இறுதி போட்டி நேற்று குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இடம்பெற்றது.

இதில் முடிவில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5வது முறையாக கோப்பையை கைப்பற்றி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

இந்த போட்டி மூலம் மற்றொரு புதிய உலக சாதனை படைத்து இருப்பதாக ஜியோசினிமா தெரிவித்து உள்ளது. ஜியோசினிமா செயலியில் டாடா ஐபிஎல் 2023 இறுதி போட்டியை சுமார் 3.2 கோடி பேர் பார்வையிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஜியோசினிமா, நேரலை பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைத்துள்ளது.


முன்னதாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற 2019 ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியினை அதிகம் பேர் பார்வையிட்டனர்.


கடந்த மே 23ஆம் திகதி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற குவாலிஃபயர் போட்டியினை 2.5 கோடி பேர் பார்வையிட்டதமை அதிகமாக கருதப்பட்டது. ஆயினும் தற்போது நேற்றைய போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles