NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓய்வூதியத் திணைக்களத்தில் புதிய டிஜிட்டல் முறைமைகள் அறிமுகம்!

ஓய்வூதியத் திணைக்களத்தில் புதிய டிஜிட்டல் முறைமைகள் அறிமுகம் இன்று (17) பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் A.H.M.H. அபயரத்னவின் தலைமையில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிகழ்வானது கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதுடன், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், ஐந்து பிரிவுகளில் இந்த ஒருங்கிணைந்த முறைமைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

ஓய்வூதியதாரர் இறப்பு தொடர்பான தகவல் பதிவு முறைமைஇ மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் கூடிய திணைக்களத்தின் இணையத்தளம், ஓய்வூதியதாரர்களுக்கான புகையிரத பயணச் சீட்டு வழங்கும் முறைமை, விதவை மற்றும் அனாதை குழந்தைகள் திட்டத்தில் பதிவு செய்யும் தகவல் முறைமை மற்றும் மறுசீரமைக்கப்பட்ட அரச ஊழியர் வருங்கால வைப்பு நிதி செயன்முறை போன்ற முறைமைகள் இதில் அடங்குகின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles