NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு. விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என கருதி 8 பேருக்கு எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று (02) குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான போராட்டத்தை தடுக்கும் வகையில் தடை கட்டளை கோரி பொலிஸார் நீதிமன்றில் விண்ணப்பித்துள்ளனர்.

இது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டினை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில், இன்று புதன்கிழமை (03) மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு கட்டளையிட்டுள்ளது.

அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share:

Related Articles