(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையில் கடந்த 6 மாதங்களில் உயிரிழந்த காட்டு யானைகளில் 36 யானைகள் பாதுகாப்பற்ற மின் வேலிகளினால் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 153 யானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், யானை – மனித மோதல்கள் காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் அதிக யானைகள் பலியாகிய ஆண்டாக பதிவாகியுள்ளதுடன் அந்த ஆண்டில் இலங்கையில் 439 யானைகள் உயிரிழந்தமையால் உலகில் அதிக யானைகள் உயிரிழந்த நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் யானை – மனித மோதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக பதிவாகியுள்ளது. இது இந்தியாவுக்கு அடுத்தபடியாக உள்ளது.
இந்த யானை மரணங்கள் மற்றும் மனித உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் யானை – மனித மோதல்களைக் குறைக்கப் பயன்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமற்ற தீர்வுகள் ஆகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.