கடந்த 2024ஆம் ஆண்டு 24 ஆயிரத்து 761 சோதனைகள் நடத்தப்பட்டதன் விளைவாக, 23 ஆயிரத்து 953 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அவற்றில் நிறைவடைந்த வழக்குகளுக்கு நீதவான் நீதிமன்றங்கள் 207 மில்லியன் ரூபா அபராதம் விதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நிலுவையில் உள்ள சோதனைகள் மீதான வழக்குகளை விரைந்து பதிவு செய்ய அலுவலர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதிக கட்டணம் வசூலித்தல், தயாரிப்பு தகவல்களை தவறாக சித்தரித்தல், விலைகளை காட்சிப்படுத்த தவறுதல், மின் சாதனங்களுக்கான உத்தரவாதத்தை வழங்காமை, பில்களை நிறுத்துதல், சந்தையின் போட்டிக்கு எதிரான நடைமுறைகளில் ஈடுபடுதல் மற்றும் நியாயமற்ற சூழ்நிலையில் பொருட்களை விற்பனை செய்தல் போன்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சட்ட மீறல்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.