இலங்கை அரசாங்கம் கடந்த 2023ஆம் ஆண்டில், மில்லியன் ரூபாய் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட அரிசி தொகையை பல்வேறு வடிவங்களில் பல நாடுகளுக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஐரோப்பா, வட துருவப்பகுதி, வட அமெரிக்கா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு அரைக்கோள நாடுகளுக்கு இந்த அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
அந்த காலகட்டத்தில் நெல் உற்பத்தி 4.5 மில்லியன் மெட்ரிக் தொன்களைத் தாண்டியிருந்த நிலையில், இது சுமார் 13 மாதங்களுக்கு உள்ளுர் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க, கடந்த வாரம் பாராளுமன்றில் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான நெல் உற்பத்தி புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.