NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டில் இன்று பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு அண்மையில் வசிப்போர் மற்றும் கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் கடல் அலையின் உயரம் 2.5-3 மீற்றர் வரை உயரக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

Share:

Related Articles