NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடலில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு!

மேற்கு அமெரிக்காவில் உள்ள தீவுகள் நிறைந்த மாநிலம் ஹவாய் தீவில் உள்ள கடற்கழர பகுதியில் அமெரிக்க இராணுவத்தின் விமான படைக்கு சொந்தமான விமான தளம் ஒன்று உள்ளது.

இந்த தளத்திற்கு வோஷிங்டன் மாநில விட்பி தீவில் இருந்து 9 பயணிகளுடன் போயிங் போஸிடான் 8-ஏ ரக அமெரிக்க கண்காணிப்பு விமானம் ஒன்று விமான தளத்தில் தரையிறங்க முற்பட்ட போது, அது எதிர்பாராதவிதமாக ஓடு தளத்தை தாண்டி வேகமாக சென்று, பிறகு கடல்நீரில் இறங்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை எனவும், பயணிகள் அனைவரும் காயங்கள் ஏதுமின்றி கடலில் நீந்தி கரை சேர்ந்து உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

கருமேகங்கள் மற்றும் மழையினால் ஓடுதளம் விமானிக்கு தெளிவாக தெரியவில்லை என்றும் இதனால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த விமானத்தில் இருந்து எரிபொருள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் ஏதும் கடல் நீரில் கலந்து விடாமல் தடுக்கும் விதமாக கடல் நீரில் பலமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Share:

Related Articles