NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடலில் மூழ்கிய பாடசாலை மாணவர்களில் ஐவர் மீட்பு – ஒருவர் மாயம்…!

காலி, ஹபராதுவ, தல்பே கடலில் நீராடச் சென்ற மாணவர்களில் 6 பேர் நேற்று மாலை அலையில் அடித்து செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஐந்து பேரை பொலிஸார் பிரதேச மக்களுடன் இணைந்து மீட்டுள்ள நிலையில் அதில், ஒரு மாணவர் மட்டும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல் – பொத்துஹெர பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், குருநாகல் பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்பு ஒன்றின் ஏற்பாட்டில் சுற்றுலா சென்றிருந்த மாணவர்கள் குழுவே இவ்வாறு அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் .

Share:

Related Articles