NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடலில் மூழ்கி ஒருவர் பலி – ஒருவரை தேடும் பணிகள் தீவிரம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தல்தியவத்தை கடற்பகுதியில் குளித்த இருவர் நேற்று (28) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் கண்டவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் மற்றும் ரிக்கில்லகஸ்கட பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காணாமல் போன மற்றைய நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Share:

Related Articles