மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 41 வயதுடைய அனஸ்டன் ஹாரலஸ் அலேசியஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுளளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.இதனையடுத்த உறவினர்கள் மற்றம் மீனவர்களின் உதவியுடன் நீரில் மூழ்கி காணாமல் போனவரின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.