NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடல் கடந்த புகையிரத சேவை – வியப்பில் ஆழ்த்திய சீனா…!

சீனா தனது முதல் கடல் கடந்த அதிவேக புகையிரத சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த புகையிரத பாதையானது பெய்ஜியான் மாகாணத்தின் ஃபுசோ தொடங்கி தைவான் ஜலசந்திக்கு அருகேயுள்ள சியாமன் பகுதியை இணைக்கும் வகையில் அமைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதிநவீன தொழில்நுட்பத்தில் கடலின் மேல் அமைக்கப்பட்ட ஓடுபாதையில் இயங்கும் அதிவேக புகையிரத சேவையினால் போக்குவரத்து மற்றும் வர்த்தக வளர்ச்சி ஏற்படும் என சீனா எதிர்ப்பார்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளது.

மேலும் கடலுக்கு மேலான அதிநவீன புகையிரத சேவையானது 545 பயணிகளுடன் மணிக்கு 350km வேகத்தில் பயணிக்க கூடியது என்பதனால் பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles