அவசர தேவைகள் உள்ளவர்கள் மட்டும் அவசர கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறும் ஏனைய விண்ணப்பதாரர்கள் ஒக்டோபர் வரை விண்ணப்பிப்பதைத் தாமதப்படுத்துமாறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒக்டோபர் மாதம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் சர்வதேச தரத்ததுக்கமைய புதிய ஈ-கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் புதிய கடவுச்சீட்டுகளில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுமெனவும் அவசர தேவைகளுக்கு மட்டுமே கடவுச்சீட்டுகளை விண்ணப்பிக்குமாறும் பொதுமக்களை வலியுறுத்தினார்.
அத்தோடு, பல்வேறு காரணங்களால் புதிய கடவுச்சீட்டுக்கான டெண்டர் தாமதமானதால் புதிய கடவுச்சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.