NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடுகன்னாவ பிரதேசத்தில் மலை ஏற்றத்திற்காகச் சென்ற வெளிநாட்டவர் சடலமாக மீட்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கடுகன்னாவ பிரதேசத்தில் மலை ஏற்றத்திற்காகச் சென்ற 32 வயதுடைய டென்மார்க் சுற்றுலாப் பெண் ஒருவர் கடந்த 10ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்டி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், குறித்த பெண்ணின் சடலம் இன்று (14) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் வெளியேறுவதாக கூறிய பகுதியில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மலை ஏறச் செல்வதாகக் கூறி ஹோட்டலில் இருந்து வெளியேறிய வெளிநாட்டுப் பெண் மீண்டும் விடுதிக்கு வரவில்லை என விடுதி உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles