கடுவெல மாபிம பகுதியில் புதிய எரிவாயு நிரப்பு முனையம் நாளை வைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கெரவலப்பிட்டி முனையம் போதாது. நாளொன்றுக்கு 60,000 சிலிண்டர்கள் வெளியிடப்படுகின்றன. டிசம்பரில் இருந்து வாரத்தில் 2 நாட்கள். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் கெரவலப்பிட்டி மற்றும் மாபிம இரண்டும் செயற்பாட்டில் இருந்தன. கெரவலப்பிட்டியை நிறுத்த வேண்டி ஏற்பட்டால், மாபிமவில் இருந்து தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்க முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.