கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் அபிவிருத்தியை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பானின் நிறுவனமான JICA இணங்கியுள்ளது.
சலுகைக் கடனுதவியின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அரசாங்கம் கடனை செலுத்த முடியாத காரணத்தினால் இத்திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த இந்நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, விமான நிலையத்தின் கட்டுமானத்திற்கான 570 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்காமல் நிறுவனம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில், இத்திட்டத்தின் 2ம் கட்டத்தை ஆரம்பிக்க ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விமான போக்குவரத்து மற்றும் துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.